பாகிஸ்தானில் 25% குழந்தைகள் 2030-ல் படிக்காதவர்களாக இருப்பார்கள் : யுனெஸ்கோ

0
20

யுனெஸ்கோவின் புதிய கணக்கெடுப்புப்படி  உலகின் நிலையான அபிவிருத்தி இலக்குகளின் அடிப்படையில்  (எஸ்.டி.ஜி) 2030 காலக்கெடுவிற்குள் நான்கு

பாகிஸ்தான் குழந்தைகளில் ஒருவர் ஆரம்பக் கல்வியை முடிக்க மாட்டார் என தெரிவித்து உள்ளது.

யுனெஸ்கோவின் புதிய கணிப்புகள் படி  அனைவருக்கும் 12 ஆண்டு கல்வி என்ற இலக்கை நோக்கிய திட்டத்தில் பாகிஸ்தான் இலக்கை பாதிதான்  அடையும் என்பதைக் காட்டுகிறது, 50 சதவீத இளைஞர்கள் தற்போதைய விகிதத்தில் உயர்நிலைக் கல்வியை இன்னும் முடிக்கவில்லை. 2030-க்குள் 6-17 வயதுடைய ஆறில் ஒருவர்  கலவி பெறுவதில் இருந்து  வெளியேறுகிறார்கள்  என்று டான் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. 

40 சதவீதம் பேர் தற்போதைய விகிதத்தில் இடைநிலைக் கல்வியை முடிக்க மாட்டார்கள் என்று ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட நாடுகள் தங்கள் கடமைகளை எதிர்கொள்ள வேண்டும். எங்களால் அவற்றைக் கண்காணிக்க முடியாவிட்டால் இலக்குகளை அமைப்பதில் என்ன பயன்? காலக்கெடுவை நாம் நெருங்குவதற்கு முன்பு இந்த தரவு இடைவெளியை சரிசெய்ய சிறந்த நிதி மற்றும் ஒருங்கிணைப்பு தேவை என யுனெஸ்கோ புள்ளி விவர நிறுவன இயக்குனர் சில்வியா மோன்டோயா கூறினார்.

ஐ.நா. உயர் மட்ட அரசியல் மன்றத்திற்காக தயாரிக்கப்பட்ட புதிய யுனெஸ்கோ திட்டங்கள், முன்னேற்றத்தின் விரைவான முடுக்கம் இல்லாமல் உலகம் அதன் கல்வி கடமைகளில் தோல்வியடையும் என்பதைக் காட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here