அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் சவூதி அரேபியா பயணம்

0
6

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ, அதன் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஈரானுடனான மோதல் நாளுக்கு நாள் முற்றியுள்ள நிலையில்,  மைக் பாம்பியோவின் சவூதி அரேபிய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

சவூதி அரேபிய மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் ஆகியோரை சந்தித்து  மைக் பாம்பியோ பேச உள்ளார்.   இந்த சந்திப்புக்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ செல்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here