நடிகர் சங்க தேர்தலில் 3 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி

0
9

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 23-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் 7-ந் தேதி தொடங்குகியது. மனுதாக்கல் செய்ய 10-ந் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டது. மனுக்களை 14-ந் தேதி வாபஸ் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த தேர்தலில் நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச்செயலாளர் பதவிக்கும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். கார்த்தி பொருளாளர் பதவிக்கு நிற்கிறார். நடிகர் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு பாக்யராஜ்  போட்டியிடுகிறார். விஷாலை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் களம் காண்கிறார்.

இந்நிலையில், நடிகர் சங்க தேர்தலில் 3 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நடிகர்கள் ரமேஷ்கண்ணா, விமல், நடிகை ஆர்த்தி கணேஷ் ஆகியோரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சந்தா கட்டாததால் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியில் போட்டியிட 3 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகக்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here