அர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர்

0
8

கிறிஸ் பிராட்டும், ஹாலிவுட் நடிகை அன்னா பாரிசும் காதலித்து 2009–ல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஜேக் என்ற 6 வயது மகன் உள்ளான்.

இந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கிறிஸ் பிராட்டும், அன்னா பாரிசும் கடந்த வருடம் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன்பிறகு பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் மகள் கேத்தரினை கிறிஸ் பிராட் காதலித்து வந்தார். கேத்தரின் எழுத்தாளராக உள்ளார். கடந்த ஜனவரி மாதம் இவர்கள் நிச்சயதார்த்தம் நடந்தது. 

தற்போது கலிபோர்னியாவில் உள்ள மொன்டிசிட்டோ நகரில் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமண நிகழ்ச்சியில் அர்னால்ட் தனது மனைவி மரியாவுடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். திருமண புகைப்படத்தை நடிகர் கிறிஸ் பிராட் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு கேத்தரின் திருமணத்துக்கு சம்மதித்தது மகிழ்ச்சியாக உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார். 


கேத்தரினும் ‘‘இந்த வாழ்க்கையை உங்களை விட்டு வேறு யாருடனும் வாழ விரும்பமாட்டேன்’’ என்று குறிப்பிட்டு உள்ளார். இவர்கள் திருமணத்துக்கு இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here