யார் இந்த நேசமணி ?

0
16

உலக அளவில் தற்போது வைரலாகிவரும் விடயம் ஹேஷ்டேக் “பிரே போர் நேசணி” . யார் இந்த நேசமணி யாரால் இந்த வார்த்தை வைரலானது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது.

அண்மையில் பாகிஸ்தானின் கட்டுமான நிறுவனம் ஒன்று, சுத்தியல் ஒன்றின் படத்தினை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இதை உங்கள் ஊரில் என்னவென்று அழைப்பார்கள்? என  என கேட்டிருந்தது.

இதற்கு இந்திய குறும்புக்கார இணையவாசி ஒருவர் பதில் அளிக்கையில், ‘இதன் பெயர் சுத்தியல். இது விழுந்தால் டாங், டாங் என சத்தம் கேட்கும். இது காண்டிராக்டர் நேசமணியின் தலையில் விழுந்ததால், அவர்  உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்’ என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து அவரை தொடர்ந்து மற்ற நெட்டிசன்களும் தொடர்ந்து பதிலளிக்கவே ஒரு கட்டத்தில், ‘#Pray_for_Nesamani’ எனும் ஹேஷ்டேக்கினை உருவாக்கி அதனை பரப்ப ஆரம்பித்த நிலையில்  இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்நிலையில் குறித்த பதிலை பதிவிட்ட அந்த குறும்புக்கார நெட்டிசன் தற்போது இது குறித்து வீடியோ ஒன்ற வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

நான் விக்னேஷ் பிரபாகர். ஒரே நாளில் எனது பதிவால் புகழ்ப்பெற்ற நேசமணி பிரபாகர் நான்தான். விளையாட்டாக பதில் கூறினேன். உலக அளவில் டிரெண்ட்டாகும் என தெரியாது. சத்தியமாக இதுபோன்று நினைத்துப் பார்த்ததில்லை. தொலைபேசி உடையும்  அளவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

இதற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. நான் துபாயில் பணிபுரிகிறேன். என்னால் டிவி பார்க்க முடியாது. ஊரில் இருப்பவர்கள், டிவிகளில் ஒளிபரப்புவதை எனக்கு படமெடுத்து  அனுப்பி வைக்கின்றனர். மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். 

வடிவேலுவுக்கு  மிக்க நன்றி. சுத்தியல் என்றதும் ப்ரண்ட்ஸ் படம்தான் ஞாபகம் வந்தது. அதில் வரும் டங், டங் சவுண்ட் எனக்கு திடீரென தோன்றியது. அதனை கூறினேன். இதற்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்தது ஆச்சரியமளிக்கிறது. 

சமூக வலைத்தளத்தின் தாக்கம் மற்றும் முக்கியத்துவம் இதன்மூலம் எனக்கு நன்கு புரிந்தது. எனது பதிலுக்கு  ஏதோ  10 பேர் லைக் செய்வார்கள் என்றுதான் நினைத்தேன். வேறு எந்த பிளானும் இல்லை. எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here