எனக்கா ‘ரெட்கார்டு’? – நடிகர் சிம்புவின் சர்ச்சை பாடல்

0
30

நடிகர் சிம்புவால் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அந்த படத்தின்

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரித்த சங்கத்தின் தலைவர் விஷால் புதிய படங்களில் சிம்புவை ஒப்பந்தம் செய்ய தடைவிதிக்க (ரெட் கார்டு) முயற்சி செய்ததாக ரசிகர்கள் குற்றம் சாட்டினர்.

இதை எதிர்த்து சிம்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். புதுபட ஒப்பந்தங்களில் தயாரிப்பாளர் சங்கமும் நடிகர் சங்கமும் தலையிட கூடாது என்று மனுவில் கூறியிருந்தார். இந்த நிலையில் சிம்பு நடித்து திரைக்கு வர உள்ள ‘வந்தா ராஜாவாதன் வருவேன்’ என்ற படத்தில் அவர் பாடிய ‘ரெட்கார்டு’ என்ற பாடல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பாடல் மூலம் விஷாலுக்கு அவர் பதிலடி கொடுத்து இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது. சிம்பு பாடிய பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் வருமாறு:-

“எனக்கா ரெட்கார்டு, எடுத்துப்பாரு ரிக்கார்டு. உள்ள விடமாட்டேன்னு சொல்லுறதுக்கு நீ யாரு. வெளியே நான் போடும் ஆட்டத்துக்கு இப்ப கூட்டத்த பாரு. பட்டத பட்டுன்னு சொன்னாக்கா, என கெட்டவன்னு சொல்றாங்க. ஓரமா போயி உட்கார்ந்தா என உத்தமன்னு சொல்றாங்க.

தப்புன்னு தெரிஞ்சா டப்புன்னு கொதிக்கும் பிரச்சினை எனக்கு பாயாசம். என உரசி பார்த்தா நீ நாசம். சேத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டு போனாலும் கேட்டுல நிக்கிற ஆள் இல்லடா. நான் தனி ஆள் இல்லடா.” இவ்வாறு சிம்பு பாடியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here