அதிக படங்களில் நயன்தாரா

0
37

தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலிலும் முதல் இடத்தில் இருக்கிறார்.

ஒரு படத்துக்கு ரூ.4 கோடி முதல் ரூ.6 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். கதாநாயகர்களை முதன்மைபடுத்தும் படங்கள்தான் ஓடும் என்ற மாயையையும் உடைத்துள்ளார்.

நயன்தாராவை கதையின் நாயகியாக வைத்து அதிக படங்கள் வருகின்றன. அவை வசூலும் பார்க்கின்றன. 2005-ல் ஐயா படத்தில் ஆரம்பமான அவரது சினிமா மார்க்கெட் ஏறுமுகமாகவே உள்ளது. தெலுங்கு, மலையாள பட உலகிலும் ஆதிக்கம் செலுத்துகிறார். சிம்பு, பிரபுதேவாவுடன் ஏற்பட்ட காதல் சர்ச்சைகள் இவர் மார்க்கெட்டை அசைக்கவில்லை.


தனக்கென தனி ஸ்டைல், பாணியை உருவாக்கி உள்ளார். இந்தியில் வித்யாபாலன், கங்கனா ரணாவத், தீபிகா படுகோனே போன்ற நடிகைகள் கதாநாயகர்களுக்கு இணையாக பட உலகை கலக்கி வருகின்றனர். அதுபோல் தென்னிந்திய மொழி படங்களில் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார். கடந்த வருடம் அவர் நடிப்பில் கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், தெலுங்கில் ஜெய்சிம்ஹா படங்கள் வந்தன.


இந்த வருடமும் அதிக படங்கள் கைவசம் வைத்துள்ளார். அஜித் ஜோடியாக நடித்த விஸ்வாசம் படம் திரைக்கு வந்துள்ளது. ஐரா, கொலையுதிர் காலம் படங்கள் அடுத்தடுத்து வருகின்றன. விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோர் ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here