ஸ்ரீதேவி வாழ்க்கை கதையில் கிளாமராக நடிக்கும் பிரியா வாரியர்- டிரெய்லர்

0
38

‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற ‘மாணிக்ய மலரே பூவி’ என்ற பாடலில் இந்த காட்சி இருந்தது.

பிரியா வாரியரின் கண் சிமிட்டல் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இதனால் டுவிட்டரில் பின் தொடர்வோர் எண்ணிக்கையில் பிரபல இந்தி நடிகைகளை பின்னுக்கு தள்ளினார். இந்த பாடல் மத உணர்வுகளை புண்படுத்துவதாக எதிர்ப்பு கிளம்பின. போலீசில் புகார்கள் அளிக்கப்பட்டன. கோர்ட்டிலும் வழக்குகள் தொடர்ந்தனர். சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்குகளை தள்ளுபடி செய்தது.

பிரியா வாரியர் ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் நடித்து உள்ளார். ஸ்ரீதேவியின் அவர் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படம் அது. ஸ்ரீதேவி பங்களாவின்  டிரெய்லர்  ஏற்கனவே ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.


1 நிமிடமும் 49 வினாடியும் ஓடும்  இந்த வீடியோவில் பிரியா வாரியர்  கிளாமராக தோன்றுகிறார். எப்படி  ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கிறார் என்பதை  கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளது.டீசர் முடிவில்,  ஸ்ரீதேவியின் மர்ம மரணம் குறித்த குறிப்புகளைக் காட்டும் ஒரு குளியல் தொட்டியைக் காணலாம்.மும்பையில் தனது பாலிவுட் முதல் படமான ஸ்ரீதேவி பங்களாவை அறிமுகமான  பிரியா.சமீபத்தில் ரன்வீர் சிங், விக்கி கவுசல் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பிரியா வாரியர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படம் வைரலாகி வருகிறது.


ஸ்ரீதேவி பங்களா திரைபடத்தை  மலையாள திரைப்பட இயக்குனர் பிரசாந்த் மாம்பூலி இயக்கியுள்ளார்.படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் வெளியிடவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here