பாகிஸ்தானில் குளிரை போக்க பயன்படுத்திய ஹீட்டரின் வாயு கசிவு; மூச்சு திணறி 8 பேர் உயிரிழப்பு

0
25

பாகிஸ்தானில் அடுத்தடுத்து நடந்த ஹீட்டர் வாயு கசிவு சம்பவங்களில் மூச்சு திணறி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் வடமேற்கே அபோதாபாத் நகரில் பண்டி தொண்டியான் கிராமத்தில் வசித்து வந்த ஒரு குடும்பத்தினர் இரவில் தூங்க செல்வதற்கு முன் அதிக குளிராக இருக்கிறது என்பதற்காக ஹீட்டரை ஆன் செய்து விட்டு தூங்கி உள்ளனர்.  இதில், ஹீட்டர் திடீரென நின்று போயுள்ளது.  அதன்பின் அதில் இருந்து கசிந்த வாயு வீடு முழுவதும் பரவியுள்ளது.

இந்த சம்பவத்தில் 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தினை சேர்ந்த 5 பேர் மூச்சு திணறி பலியாகினர்.  இந்த பகுதிக்கு அருகே இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில் ஹீட்டரை ஆன் செய்து விட்டு தூங்க சென்ற 3 பேர் ஹீட்டர் வாயு கசிவால் மூச்சு திணறி உயிரிழந்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here