12 நாட்களில் முடிவடைந்த படம்

0
21

‘துப்பறிவாளன்,’ ‘இரும்புத்திரை’ ஆகிய படங்களில் நடித்த ராம் குமார், ‘கோகோ மாக்கோ’ என்ற படத்தின் மூலம் கதாநாயகன் ஆகியிருக்கிறார். இவருக்கு ஜோடியாக தனுஷா நடிக்கிறார். இவர்களுடன் ஒய்.ஜி.மகேந்திரன், டெல்லி கணேஷ், சாம்ஸ், அஜய்ரத்னம், சந்தானபாரதி, தினேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படத்துக்கு இசையமைத்து டைரக்டு செய்துள்ள அருண்காந்த் கூறியதாவது:-
“ஒரு பயணத்தின்போது ஏற்படும் காதலை திகிலுடன் இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம். ‘கோகோ மாக்கோ’ என்றால் தமாஷ் என்று அர்த்தம். பெரும்பகுதி கதை, கடற்கரை பகுதிகளில் நடப்பது போல் இருக்கும். படம் ஆரம்பம் முதல் இறுதிவரை சிரிக்க வைக்கும். இளம் தலைமுறையினரை கவர்ந்து இழுக்கும் வகையில், திரைக்கதை அமைத்து இருக்கிறோம்.
படப்பிடிப்பு 12 நாட்கள் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நடைபெற்று முடிவடைந்தது.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here