ராணாவுடன் திரிஷாவை இணைத்து வைப்பேன்… நடிகர் பிரபாஸ் உறுதி

0
23

ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் பிரபாஸ், ராணா நடித்திருந்தனர். இரண்டு பாகங்களில் உருவான இப்படம் திரையுலகில் வசூல் சாதனை படைத்தது. சமீபத்தில் பிரபாஸ், ராணா, ராஜமவுலி மூவரும் இந்தி பட இயக்குனர் கரண்ஜோஹர் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது பல்வேறு கேள்விகளை அவர்களிடம் கேட்டார் கரண். மாஜி கேர்ள்பிரண்ட் திரிஷாவுடனான உறவுபற்றி கரண் கேட்டதற்கு பதில் அளித்த ராணா,’10 வருடமாக நாங்கள் நண்பர்களாக இருந்தோம். 

நீண்ட நாட்கள் நண்பர்களாக இருந்தாலும் குறைந்த நாட்கள்தான் டேட்டிங்கில் ஈடுபட்டோம். ஆனால் அது எங்களுக்குள் சரியாக ஒர்க்அவுட் ஆகவில்லை’ என்றார். ‘அனுஷ்காவுடன் காதலா?’ என்று பிரபாஸிடம் கேட்டபோது,’ அனுஷ்கா மிகவும் கவர்ச்சிகரமான நடிகை. நாங்கள் நண்பர்கள்தான். காஜல் அகர்வால், தமன்னாவும் எனக்கு மிகவும் பிடிக்கும். 

ராணாவுடன் அவரது மாஜி கேர்ள் பிரண்ட் திரிஷாவை நான் இணைத்து வைப்பேன்’ என்றார். ‘இந்தியில் பாகுபலி ரீமேக் செய்தால் பிரபாஸ், ராணா, அனுஷ்கா கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம்?’ என்று ராஜமவுலியிடம் கேட்டபோது,’அனுஷ்கா கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனை நடிக்க வைக்கலாம். அந்த கதாபாத்திரத்துக்கு அவர் பொருத்தமாக இருப்பார்.  பிரபாஸ். ராணா கதாபாத்திரங்களுக்கு அவர் இருவரை தவிர வேறு எந்த நடிகரையும் என்னால் யூகிக்க முடியவில்லை’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here