மின்தூக்கியிற்கு இடையில் சிக்கி ரக்பி வீரர் பலி

0
21

இரவு விடுதி ஒன்றிற்கு சென்ற இளைஞர் ஒருவர் மின்தூக்கியிற்கு இடையில் சிக்கி மரணமடைந்துள்ளார்.

இன்று (29) அதிகாலை 1.50 மணி அளவில் கொழும்பு 02, நவம் மாவத்தையில் உள்ள ‘கிரீன் லங்கா டவர்’ தனியார் நிறுவன கட்டடத்தில், 9 ஆவது மாடியில் உள்ள எமியூசியம் (Amuseum) எனும் இரவு விடுதிக்கு செல்ல முற்பட்ட வேளையில், மின்தூக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கீழ் தளத்தில்விழுந்த மின் தூக்கி விபத்துக்குள்ளாகியதில் குறித்த இளைஞர் மரணம் அடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த விபத்தில் மரணம் அடைந்தவர் தலங்கம வடக்கு பத்தரமுல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான, கோகில சமந்த பெரும எனும் ரக்பி வீரர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

‘மாகோ’ எனும் பெயர் கொண்டு அழைக்கப்படும் குறித்த இளைஞர் CR&FC ரக்பி கழகத்திற்காக விளையாடிவரும் ரக்பி வீரராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த மின்தூக்கியில் மூவர் வைத்துள்ள நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது மின் தூக்கியிற்கு இடையில் சீக்கிய இளைஞர் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார்.

குறித்த நபரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது குறித்த விபத்தில் காயமடைந்த இருவரில் ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளதோடு மற்றைய நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக ருவன் குணசேகர தெரிவித்தார்

கொம்பனித்தெரு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here