ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் புஜாரா சதம்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்கம் முதலே இந்திய அணி ரன் எடுக்க முடியாமல் திணறியது. ராகுல் 2 ரன்களுக்கும், முரளி விஜய் 11 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். கேப்டன் கோலி 3 ரன்களும், ரஹானே 13 ரன்களும் எடுத்த நிலையில் வெளியேறினர். 41 ரன்கள் எடுப்பதற்குள் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோஷ் ஹாசில்வுட் 2 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். உணவு இடைவேளையின் போது, இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்களை எடுத்திருந்தது.
இன்றைய ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்து உள்ளது. புஜாரா சதம் அடித்துள்ளார். புஜாரா 117  ரன்களும், முகமது ஷமி 5 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.
டெஸ்ட் போட்டிகளில் 16 சதம் விளாசியுள்ள புஜாரா 5 ஆயிரம் ரன்களை கடந்தார்.
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close