மார்பக புற்றுநோய் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்

0
29

நேற்று வரை நம்முடன் சிரித்துப் பேசி மகிழ்ந்த பெண்கள், திடீரென இன்று புற்றுநோய்க்கு இரையாகி, நம் கண்முன்னே தவணை முறையில் உயிரை விடுவதைப் பார்க்கிறோம். ஆனால் மார்பக புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது என்பதற்கான காரணங்கள் தெளிவாக இதுவரை இல்லை. அதேநேரம் யாருக்கெல்லாம் இந்த மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அவற்றை பார்க்கலாம்…

பொதுவாக புற்றுநோய் உயிரணுக்கள், ஈஸ்ட்ரஜன் எனப்படும் ஹார்மோனால் வளர்ந்து, பின்னர் பல இடங்களுக்கு  பிரியக்கூடியதாகும்.

இள வயதில் அதாவது 9 வயதுக்கு முன்பு பூப்பெய்துவது, மிக தாமதமான மெனோபாஸ், அதாவது 55 வயதுக்குப் பிறகு… இந்த இரண்டுமே மார்பகப் புற்றுநோய்க்கான பிரதான காரணங்கள்.

30 வயதுக்குப் பிறகு முதல் குழந்தையைப் பிரசவிப்பது ஒரு காரணமாக உள்ளது.

பெண்களுக்கு பூப்பெய்தியதில் இருந்து, 15 வருடங்களில், உடலுக்கு ஒரு மாற்றம் தேவைப்படும். ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாக இருந்தால் மார்பகப் புற்றுநோய் வரும். அதை ஈடுகட்ட உடலுக்கு சில தற்காலிக மாற்றங்கள் அவசியம். அது நடக்காத போது புற்றுநோய் அபாயம் அதிகமாகும்.

கல்யாணத்துக்குப் பிறகு பெண்கள், எடை விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. அதிகப்படியான கொழுப்பு, ஈஸ்ட்ரோஜென்னாகவே மாறும். அது ஆபத்தின் அறிகுறி.

அதிகப்படியாக கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வதும், மெனோபாஸுக்கு பிறகு பெண்மையைத் தக்க வைத்துக்கொள்ள எடுத்துக்கொள்கிற ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபியும் கூட மார்பகப் புற்றுநோய்க்கு வாசல்படியாக உள்ளது.

தினமும் அரை கோப்பை ஒயின் அல்லது சிறிதளவு பீர் அருந்துவது மார்பக புற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது என்று உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியத்தின் ஓர் அறிக்கை கூறுகிறது.

50 வயதை கடந்த பெண்ணாக மாதவிடாய் காலத்தை கடந்தவராக இருக்கும் பட்சத்தில், உங்களது குடும்பத்தில் மார்பக புற்றுநோயால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அந்நோய் உங்களுக்கு வருவதற்கான அபாயம் அதிகமாகவே இருக்கின்றது.

அநேக மார்பக கட்டிகள் புற்றுநோயாக இருப்பதில்லை. ஆனால் மார்பக கட்டி என்றாலே உடனடியாக புற்று நோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அது போல் நீர்கசிவு, ரத்த கசிவு இருந்தால் மருத்துவ பரிசோதனை மிக மிக அவசியம் ஆகும். பெண்கள் ஒவ்வொரு மாதமும் மார்பகத்தில் கட்டி இருக்கின்றதா என சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here