அலரிமாளிகைப் பகுதியில் பரபரப்பு ; 2 ஆயிரம் பொலிஸார், 10 விசேட அதிரடிப்படை குழுக்கள் குவிப்பு

0
1

“ஜனநாயகத்தை பாதுகாப்போம் : ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம்”  எனும் தொனிப்பொருளில் ஐக்கிய தேசியக்கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ள நிலையில் அப்பகுதியில் பெரும் திரளானோர் அலரிமாளிகைப் பகுதியில் குழுமியுள்ளன்.

கடந்த 26 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக ஜனாதிபதியினால் தெரிவுசெய்யப்பட்டதையடுத்து நாட்டின் அரசியலில் திடீர் நெருக்கடி நிலை தோன்றியது.

இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஐக்கிய தேசிய முன்னணியை தவிர்த்துவிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி தற்போது தனியாக ஆட்சியமைத்துள்ளது.

இதனையடுத்த நாட்டில் அரசியல் நெருக்கடி நிலை தோன்றியுள்ளது.

கலகமடக்கும் பொலிஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதி பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நீர்த்தரைப் பிரயோம் மேற்கொள்ளும் வாகனங்களும் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் 2 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் 600 போக்குவரத்துப் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் இதைவிட 10 விசேட அதிரடிப்படையின் குழுக்களும் கடமையில் ஈடுபடுத்தப்படடுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேவேளை, கொழும்பில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரச நிறுவனங்களுக்குள் பிரவேசிக்க கொழும்பு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அமெரிக்க நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here