`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது’ – ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு!

0
23

#MeToo பாலியல் குற்றச்சாட்டுகளால் இந்தியா திணறிக்கொண்டிருக்கிறது. பெண்கள் மீது ஏவப்படும் பாலியல் தொல்லைகள் குறித்த செய்திகள் தினமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில், நள்ளிரவு நேரம் தன் டாக்ஸியில் பயணம் செய்த பெண் பயணியின் பாதுகாப்புக்காக சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருந்த ஊபர் டிரைவரின் செயல் நெகிழச் செய்துள்ளது.

டிரைவர்

ப்ரியஷ்மிதா எனும் பெண் கடந்த 14-ம் தேதி நள்ளிரவு 1 மணி அளவில் தன் தாயுடன் ஊபர் டாக்ஸியில் டிரைவர் சந்தோஷ் என்பவருடன் பயணம் செய்துள்ளார். ஆனால், அவர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றபோது அங்கு கேட் பூட்டப்பட்டிருந்தது. இதனால் செய்வதறியாமல் ப்ரியஷ்மிதாவும் அவரது தாயாரும் தவிக்க,  நள்ளிரவு நேரம் என்பதால் பெண்கள் இருவரையும் தனியாக விட்டுச் செல்ல முடியாது என்று சுமார் ஒன்றரை மணி நேரம் அங்கேயே இருந்ததுடன் கேட் திறந்த பிறகே கிளம்பிச் சென்றுள்ளார் ஊபர் டாக்ஸி டிரைவர் சந்தோஷ்.

இதுகுறித்து ப்ரியஷ்மிதா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “எங்களை இறக்கிவிட்ட பின்பும் ஒன்றை மணி நேரம் எங்களுக்காகக் காத்திருந்தார். அடுத்த பயணத்துக்காகப் பிற பயணிகள் அவரை அழைத்த போதும் `இரண்டு பெண்களை தனியாக விட்டுப் போக முடியாது’ எனக் கூறி மறுத்துவிட்டார். உண்மையிலேயே அவர் பெருமைக்கு உரியவர். அம்மாவும், நானும் எப்போதும் அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்” எனப் பதிவிட்டுள்ளார். தனது வருமானத்தைப் பொருட்படுத்தாமல் நள்ளிரவு நேரம் பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கருதி செயல்பட்ட டிரைவர் சந்தோஷுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Priyashmita Guha@priyashmita

hey @Uber_India , wanted to tell you about your driver Santosh. Last night the place we were staying had it’s gate was closed. It was 1 AM. He refused to let us go & waited for 1.5 hours till we got in. Kudos to him. Mom and I eternally grateful

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here