மனித விழித்திரையை செயற்கையாக உருவாக்கிய மருத்துவர்கள்!

னித விழித்திரைத் திசுக்களை உருவாக்கி, கண் மருத்துவத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார்கள் அமெரிக்க ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

விழித்திரை

விழித்திரை நம் கண்களின் முக்கிய அங்கம். கண்ணின் உட்புறத்தில் உள்ள கடைசி அடுக்கு. கண்களின் மூலம் பார்க்கும் காட்சி விழித்திரையில் தலைகீழாகப்பட்டு, சில மின்வேதி மாற்றங்கள் அடைந்து, சிக்னல்களாக மாறி மூளைக்குச் செல்கிறது. மூளை அந்தத் தகவல்களை நேரான உருவங்களாக மாற்றி உணர்த்துகிறது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த விழித்திரையை உருவாக்கும் திசுக்களைத்தான் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஸ்டம்செல்களைப் பயன்படுத்தி முழுக்க முழுக்க ஆய்வகத்திலேயே இந்தத் திசுக்களை உருவாக்கியுள்ளனர். ஸ்டெம்செல்கள் முழுமையாக வளர்ச்சியடைந்து விழித்திரையாக உருமாறியது. மகிழ்ச்சியில் திளைத்த ஆராய்ச்சியாளர்களுக்குக் கூடவே போனஸாக மற்றொரு மகிழ்ச்சியும் காத்திருந்தது.

 

பார்வை குறைபாடு

ஸ்டெம்செல்களின் மூலம் உருவான விழித்திரையில் நீல நிறத்தைப் பிரித்தறியும் செல்களும் உருவாகியிருந்தன. தொடர்ந்து, சிவப்பு, பச்சை நிறங்களைப் பிரித்தெரியும் செல்களும் வளர்ச்சியடைந்துள்ளதைக் கவனித்துள்ளனர்.  மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்ற ஆராய்ச்சியாளர்கள், இந்த ஆய்வு முடிவை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

இதை உருவாக்கியதன் மூலம் நிறக்குருடு, வயது முதிர்வால் கண்ணின் நடுப்பகுதியில் ஏற்படும் பார்வைக் குறைபாடு அல்லது பார்வை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பார்வையை அளிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close