கண்களை பாதுகாப்போம்

0
2

கண்களை பாதுகாக்க தொலைக்காட்சிக்கு அருகில் உட்கார்ந்து பார்க்காதீர்கள். உங்கள் தொலைக்காட்சியின் செங்குத்தான உயர அளவு 10 அங்குலம் இருந்தால் நீங்கள் 10 அடி தொலைவில் இருந்து டி.வி. பாருங்கள்.

மங்கலான வெளிச்சத்தில் புத்தகங்களை படிக்காமல், பின்புறத்தில் இருந்து விளக்கின் வெளிச்சம் பிரகாசமாக புத்தகத்தின் மீது விழும் நிலையில் படிப்பது எளிதாக இருக்கும்.

குழந்தைகளுக்கு மாறுகண் தானாகவே சரியாகாது. அது அதிர்ஷ்டமும் அல்ல. தொடக்க நிலையிலேயே முறையான சிகிச்சை மற்றும் பயிற்சி இருந்தால் மாறுகண் சரியாகும் வாய்ப்பு உள்ளது. ஆனால், அலட்சியமாக இருந்தால் பார்வை பறிபோய் விடும்.

கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளதால், பார்வைத் திறனை பாதுகாக்கும் சக்தி அதற்கு உண்டு. ஆனால், கேரட் சாப்பிடுவதன் மூலம் இழந்த பார்வைத்திறனை மேம்படுத்த முடியாது.

இறந்தவர்களின் கண் தானமாக கிடைத்தபிறகு, தேவைப்படுவோருக்கு முழு கண்ணும் மாற்றுச் சிகிச்சை செய்யப்படுவதில்லை. மாறாக தானமாக பெற்ற கண்ணில் உள்ள விழி வெண்படலம் (கார்னியா) மட்டுமே மாற்றுச் சிகிச்சையில் பொருத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here